புதுதில்லி:
தலைநகர் புதுதில்லியில் நான்குவயது சிறுமி, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார். இது தொடர்பாக 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.தலைநகர் புதுதில்லியில் சதாராவில் உள்ள மான்சரோவர் பூங்காவில் புதன்கிழமையன்று இக்கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்வழக்கை விசாரித்திடும் காவல் அதிகாரி கூறுகையில், புதன்கிழமையன்று மாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவம் குறித்து ஒரு தொலைபேசி வந்ததாகவும், தான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது 25 வயது இளைஞன் ஒருவன் பக்கத்து வீட்டிலிருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்தது என்றும் கூறினார்.கூலி வேலை செய்யும் அந்தச் சிறுமியின் பெற்றோர், வேலைக்குச் சென்றுவிட்டதால், அந்தச் சிறுமி தனியாக இருந்திருக்கிறார். இதனைத் தெரிந்துகொண்ட பக்கத்துவீட்டிலிருந்த கயவன், அவளைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறான்.இது தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின் கீழும், குழந்தைகள் மீதானபாலியல் குற்றங்கள் தடைச் சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கயவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். வழக்கில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. (ந.நி.)