தில்லி ஜாமியா பல்கலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த மீது சங்பரிவார் அமைப்பை சேர்ந்த ஒருவர் தலையில் குடும்பியுடன் வந்து மோடிக்கு ஆதரவாகவும், #CAA #NRC க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிக்கொண்டே மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். பின் வானத் நோக்கி சுட்டார். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து காவல்துறையினர் அந்த குடும்பி வைத்த இளைஞரை கைது செய்து அழைத்து சென்றனர். காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் முன்னிலையிலேயே மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் துப்பாக்கியால் சுட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.