tamilnadu

img

செயல்படாத அமைப்பில் நீடிக்க விரும்பவில்லை... லோக்பால் அமைப்பிலிருந்து வெளியேறிய நீதிபதி திலீப் போஸ்லே!

புதுதில்லி:
லோக்பால் சட்டம் 2014-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திர கோஷை தலைவராக கொண்ட லோக்பால் அமைப் பில், அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திலீப் போஸ்லே,ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள்தலைமை நீதிபதி பிரதீப் குமார் மொஹந்தி,மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அபிலாஷா குமாரி, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.கே.திரிபாதி உட்பட 8 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.இவர்களில், நீதிபதி திலீப் போஸ்லே-தான், அண்மையில் லோக்பால் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமாவுக்கு முன்னதாக மூன்று கடிதங்களை லோக்பால் தலைவருக்கு எழுதியுள்ளார்.அதில், லோக்பால் சட்டம் பிரிவு 59-இன் படி உரிய விதிமுறைகளை வகுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்; லோக்பால் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட குழு அமைக்கவேண்டும்; ஆனால், இவை எதுவும் நடைபெறாததால் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, லோக்பால் குழுவுக்கு, கடந்த ஓராண்டில் 1,065 ஊழல்புகார்கள் வந்த நிலையில், அவற்றில் 1,000 புகார்கள், லோக்பால் சட்ட வரம்புக்குள் வராது என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 65 புகார்கள், லோக்பால் விதிமுறைகள் வகுக்கப்படாததால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.