tamilnadu

img

ஆட்சிக் கவிழ்ப்பிலேயே குறியாக இருக்க வேண்டாம்.. பெட்ரோல் - டீசல் விலையை குறைக்கவும் ஏதாவது செய்யலாம்

புதுதில்லி:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாமல் காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைப்பதிலே பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் என ராகுல் காந்தி சாடியுள்ளார். 

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.“இந்தியப் பிரதமரே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசைக் கலைப்பதில் நீங்கள் ஓய்வில்லாமல் பணியாற்றும்போது, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 35 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்ததைக் கவனிக்காமல் போயிருப்பீர்கள். கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயனை இந்தியர்களுக்கு நீங்கள்அளிப்பீர்களா? 1 லிட்டர் பெட்ரோலின் விலையை 60 ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிப்பீர்களா? அவ்வாறு செய்தால் நிச்சயம்நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும்” என்று அந்த பதிவில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.