நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு, நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையைத் திரும்பப்பெறக்கோரியும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரியும் இன்று(திங்கள்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.