புதுதில்லி, அக். 28- தீபாவளி நாளான ஞாயிறன்று ஒரே நாளில் பல்வேறு முக்கிய நகரங் களில் நிகழ்ந்த தீ விபத்துகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. இவை தவிர, தில்லியில் மட்டும் சிறிதும் பெரிது மாக 200 தீ விபத்துக்கள் பதிவாகி யுள்ளன. பட்டாசுகளால் தெலுங்கானா மாநி லம் ஹைதராபாத்தில் சுஷ்மா திரை யரங்கம் அருகே உள்ள டயர் கிடங்கில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. மும்பையில் சயன் பகுதியில் உள்ள பழைய பொருட்கள் கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீயணை ப்பு வீரர்கள் போராடி தீயை அணைத் தனர். மும்பையில் பட்டாசுகள் வெடித்த தன் காரணமாக காற்றில் மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதே போல் தலைநகர் தில்லியில் மாசு நிலை மிகவும் மோசமான நிலைக்கு அதிகரித்தது. குடிநீர் லாரிகள் மூலம் மாசு நிலையை கட்டுப்படுத்த சாலை களில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிகையலங்கார கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் கடையில் இருந்த பொருட்கள் கருகின. 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனது.