tamilnadu

img

தில்லி மெட்ரோ, பேருந்து, ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம்

புதுதில்லி:
புதுதில்லியில் இயக்கப் படும் மெட்ரோ ரயில் சேவை, பேருந்து மற்றும் ரயிலில் பெண்கள் இலவசமாகவே பயணிக்கலாம் என்று முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இலவச பயணத்தை விரும்பாத பெண்கள் மட்டும் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுதில்லியில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெண்களுக் கான புதிய சலுகையை அறிவித்துள்ளார். தில்லியில் 8.4 லட்சம் பெண்கள் தினமும் அரசுப் பேருந்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், தில்லி மாநகர பேருந்திலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது; வரவேற்பையும் பெற்றுள்ளது.

புதுதில்லிக்கு நடந்த மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்விஅடைந்த நிலையிலும், தில்லிக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெண்களுக்கு இலவச சேவை வழங்குவதற்கான இந்த திட்டத்துக்கு ஆகும் செலவு முழுவதையும் தில்லி அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.