அயோத்தி
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சர்ச்சை மிக்க அயோத்தி நகரில் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோவிலுக்கான அறக்கட்டளை தலைவராக இருப்பவர் மோகன் தாஸ். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உத்தர பிரதேச சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆகியோருடன் மோகன் தாஸ் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.