இந்தியா முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 51 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும், அதிக அளவாக 97,894 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,132 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் ஏற்பட்டவர்கள் 49 சதவிகிதத்தையும், இறப்பு சதவிகிதம் குறைந்தும் வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பானது 51,18,254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 83,198 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10,09,976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 40,25,080 பேர் குணமடைந்துள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 34.44 சதவிகிதத்தினை இம்மாநிலம் கொண்டுள்ளது.