tamilnadu

img

சுங்கச் சாவடியின் கட்டண உயர்வுக்கு சிபிஐ கண்டனம்

சென்னை, செப். 4- சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர்  விடுத்துள்ள அறிக்கை  வருமாறு: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச் சாவடி களில் எந்தவிதமான அறிவிப்புமின்றி திடீ ரென கட்டணங்களை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய அறிவிப்பினால் ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் இனி ரூ.15 கூடுதலாக செலுத்த வேண்டும். ஏற்கனவே சுங்கச் சாவடி களின் கட்டண கொள்ளையால் சொந்தமாக வாகனம் வைத்துள்ளோர் மற்றும் வாடகை வண்டிகளில் பயணிப்போர், சரக்குகளை கையாளும் வணிகர்கள் என அனைவரும் பெரும் பாதிப்பில் உள்ளனர்.  சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற அவர்களின் நியாய மான கோரிக்கைகளை மத்திய அரசு  கிடப்பில் போட்டுள்ள சூழலில் தற்போது கூடு தல் கட்டணம் என்பது கண்டனத்திற்குரியது. அதை உடனடியாக ரத்து செய்வது தான்  நியாயமானது. மக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டண உயர்வை கைவிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.