tamilnadu

img

சரிபாதி தொற்றுக்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை....

புதுதில்லி:
தில்லியில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லியில் கொரோனா பாதிப்புசமூக பரவல் நிலையை அடைந்து விட்டதா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.இந்த கேள்விக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதிலளித் துள்ளார்.அதில், தலைநகர் தில்லியில் கொரோனா பாதிப்பு சமூக பரவல்நிலைக்கு இன்னும் செல்லவில்லை என்று சிசோடியா கூறியுள்ளார்.

‘தில்லியில் சமூக பரவல் ஏற்படவில்லை. இதனை மத்திய சிறப்புஅதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்’ என்று கூறியிருக்கும் அதேநேரம் “ஜூலை 31 ஆம் தேதிக்குள்5 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள்ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்றும் சிசோடியா தெரிவித்துள்ளார்.தில்லியின் தற்போதைய நோய்இரட்டிப்பு விகிதத்தை வைத்து இந் தக் கணிப்பை வெளியிட்டுள்ளார்.இதனிடையே, “தில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல பேருக்கு தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டோம் என்றே தெரியவில்லை. தொற்று எவ்வாறு பரவியது என்பதை எங்களால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை” என்றுதில்லி சுகாதாரத்துறை அமைச்சர்சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். தில்லியில் அடுத்த 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் வரை கொரோ
னாவால் பாதிக்கப்படலாம் என அவரும் ஒரு கணக்கை வெளியிட்டுள் ளார்.