தேஸ்பூர்:
பாஜக ஒரு கலப்பட கட்சியாக மாறிவிட்டது என்று அசாம் மாநிலம் தேஜ்பூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் பாஜக எம்.பி. ராம் பிரசாத் சர்மா விமர்சித்துள்ளார்.“கடந்த 40 ஆண்டுகளாக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்காக பணியாற்றினேன். 1991-ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தேன். ஆனால், அசாமில் பாஜக இப்போது கலப்படக் கட்சியாக மாறியிருக்கிறது. அவர்களுக்கென்று சித்தாந்தம் இல்லை” என்று கூறியுள்ளார்.மேலும் பாஜகவிலிருந்து விலகியுள்ள அவர், 2021-ஆம் ஆண்டில் அசாமில் பாஜக டுதோல்வி அடையும்; காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.வழக்கறிஞரான ராம் பிரசாத் சர்மா, கடந்த 2014-ஆம் ஆண்டு தேஜ்பூர் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அவர் காங்கிரசில் இணைந்துள்ளார்.