புதுதில்லி:
இந்தியாவில், 2018-19 நிதியாண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அறிக்கை வெளியிட்டுள்ளது.வருமான வரி தாக்கல் செய்தோர் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய நேரடிவரிகள் வாரியம், 2012-13 நிதியாண்டிலிருந்து வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல்குறித்த அறிக்கையை, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி
விவரங்களின்படி, அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து, வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரம் பேர்களாக உயர்ந்துள்ளது. அதாவதுஓராண்டில் கூடுதலாக 13.8 சதவிகிதம் பேர்வரி செலுத்தியுள்ளார்.வரி செலுத்துவோரில் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெறுபவர்களாக உள்ளனர். தனிநபர் வருமான வரி செலுத்துவோர் 97 ஆயிரத்து 689 பேர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 .1 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது.
குறிப்பாக 7 தனிநபர்கள் 100 கோடிரூபாய்க்கும் அதிகமாக வரி செலுத்தியுள்ளனர். இதுவே 2017-18 நிதியாண்டில்நான்கு தனிநபர்கள் மட்டுமே 100 கோடிக்குஅதிகமாக வரி அளித்துள்ளனர்.50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய்வரை வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 16 என்று இருந்தது.அது 2018-19இல் 24 ஆக அதிகரித்துள்ளது.மொத்தம் 5 கோடியே 52 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் படிவங்கள் சமர்ப்பிக் கப்பட்டுள்ளன. இவற்றில் 2 ஆயிரத்து 849 தனிநபர்கள் 5 கோடி ரூபாய்க்கு அதிகமான சம்பள வருவாயைக் குறிப் பிட்டுள்ளனர். இதுவே முந்தைய ஆண்டில்2 ஆயிரத்து 254 பேர்களாக இருந்துள்ளது.50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய்வரை வருவாய் பெறுவதாக 30 பேரும், 100 கோடி ரூபாய்க்கு மேல் 500 கோடி ரூபாய்க்குள் வருவாய் ஈட்டுவதாக ஒன் பது பேரும் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டு வருமான வரித் தாக்கலில் இந்தஇரு பிரிவுகளிலும் அறியப்பட்ட எண் ணிக்கை முறையே 23 மற்றும் 2 மட்டுமேஆகும். 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குபவர்கள் 2 ஆயிரத்து 39 பேர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டில் ஆயிரத்து 615 ஆக இருந்துள்ளது.சம்பள வருவாய் ஏதும் இல்லை என்றுகுறிப்பிட்டு வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கைதான் அதிகபட்சமாக உள்ளது. இந்த வகையைச் சேர்ந்தவர்கள் 2 கோடியே 62 லட்சம் பேர்களாக உள்ளனர். அடுத்தபடியாக 5.5 லட்சம் ரூபாய் முதல் 9.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் 81 லட்சத்து 55 ஆயிரம் பேர்.100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கையும் 12.7 சதவிகிதம் வளர்ந்து,525 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2013-14 நிதி ஆண்டின் வருமானவரி தாக்கல் புள்ளிவிவரப்படி 446 ஆக இருந்துள்ளது.