tamilnadu

img

இதுவரையிலான உதவி ஜிடிபியில் 1 சதவீதம்தான்... பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளுக்கு அரசின் கடனுதவி சென்றடையவில்லை

புதுதில்லி:
கொரோனா பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அரசின் உதவியானது,நாட்டின் ஜிடிபி-யில் 1 சதவிகிதம் அளவிற்கே இருப்பதாகவும், பொருளாதாரத் தின் அழுத்தமான பகுதிகளுக்கு கடனுதவிசென்றடையவில்லை என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும்ரகுராம் ராஜன், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் தொற்று நோய்க்குமத்தியில் வணிகங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் மதிப்பீட்டு நிறுவனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக,பொருளாதாரத்தினை எப்படி பாதுகாப்பதுஎன்பதில்தான் இந்தியா கவனம் செலுத்தவேண்டும்.கொரோனா நெருக்கடிக்கு பின்பு, நாங்கள் விரைவில் நிதிப் பொறுப் புக்கு திரும்புவோம் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களையும் நம்பவைப்பது முக்கியம். அரசாங்கம் இதனைஉறுதிசெய்ய வேண்டும்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மார்ச் மாத இறுதியில் இருந்துஇரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட் டது. எனினும் ஜூன் மாதத்தில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டன. இது பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை தூண்டியுள்ளது.
ஏழை மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் உண்மையான பண வெளியேற்றம் என்று பார்த்தால், அது மொத்த உள்நாட்டு உற் பத்தி (ஜிடிபி) மதிப்பில் வெறும் 1 சதவிகிதம் என்ற அளவிற்கே உள்ளது.

கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ‘மூடிஸ்’நிறுவனம் இந்தியாவின் மதிப்பீட்டையும் கண்ணோட்டத்தையும் குறைத்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு. அதனைத்தொடர்ந்தே ‘பிட்ச்’ நிறுவனமும் அதன் பார்வையை மாற்றியது. ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கானவட்டி விகிதத்தை கடந்த ஆண்டு 135 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் குறைத்தது. இதேநடப்பு ஆண்டில் 115 அடிப்படை புள்ளிகளைகுறைத்துள்ளது. ஆனால் பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்துள்ளதால், எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக முந்தைய விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் அடுத்துவரும் கூட்டங்களில் மாற்றங் கள் இருக்கலாம் என்று கூறியுள்ளது.ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் நிச்சயமாக ஒத்துழைத்து வருகின்றன. ஆனால்,அது வேறெங்கோ இருப்பது போல் தெரிகிறது. ஆனால் இன்னும் பலவற்றை செய்யவேண்டியிருக்கிறது. அது அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. 

பொருளாதாரத்தின் அழுத்தமான பகுதிகளை கடன் அடைகிறதா என்பதிலும், சாத்தியமான நிறுவனங்கள் கடனை அணுக முடிகிறதா? என்பதிலும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்த வேண்டும். ரிசர்வ்வங்கி அதன் கவனத்தை மையப்படுத்த வேண்டியது இங்குதான் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இங்குள்ள வளங்கள் ரிசர்வ்வங்கிக்கு நன்றாகத் தெரியும். இன்று இந்தியாவில் வளங்கள் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், பொருளாதாரத் திறன்களை பாதுகாப்பதுதான் தற்போதைய நேரத்தில் இந்தியா செய்ய வேண்டிய வேலையாகும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.