tamilnadu

img

அஜீத் ஜோகி மகன் கைது

வேட்புமனு  ஆவணங்களில்  தவறான தகவல்கள்

ராய்ப்பூர், செப். 3- வேட்புமனு ஆவணங் களில் தவறான தகவல் களை கொடுத்ததாக சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் அஜீத் ஜோகி யின் மகன் அமீத் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு அமீத் ஜோகி சட்டீஸ்கரின் மார்வவாய் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சமீரா பைக்ராவை தோற்கடித்து எம்.எல்.ஏ.வானார். ஆனால் அவர் தனது வேட்பு மனுவில் பிறந்த தேதி, பிறந்த இடம்  குறித்து தவறான தகவல் கொடுத்துள்ளதாக சமீரா தொடர்ந்த வழக்கை சட்ட சபையின் காலம் முடிந்து விட்டதாகக் கூறி அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து காவல் துறையில் சமீரா அளித்த புகாரில் அமீத் ஜோஷி 1977ல் டெக்சாசில் பிறந்ததாக குறிப்பிடுவதற்குப் பதில் 1978-ல் சத்தீஸ்கரின் சர்பெ ஹரா கவுரெலா கிராமத்தில் பிறந்ததாக குறிப்பிடிருப்ப தாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் அமீத் ஜோஷியை போலீசார் கைது செய்துள்ள னர். இந்நிலையில் பாஜக அரசின் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் அதிகார போதையில் புத்தி சமநிலை யை இழந்துவிட்டதாக அஜீத் ஜோகி கண்டனம் தெரி வித்துள்ளார்.