புதுதில்லி:
இந்தியாவில் 21 வயது முதல் 40 வயதுள்ளவர்களை கொரோனா அதிகம் தாக்கியுள்ளது என என மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் சனிக்கிழமை காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த லவ் அகர்வால், இந்தியாவில் சனிக்கிழமை நிலவரப்படி 2,902 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை 601 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.மேலும், தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 17 மாநிலங்களைச் சேர்ந்த 1,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் இது 30 சதவீதம் ஆகும்.கொரோனா பாதித்தவர்களில்,
0- 20 வயது - 9 சதவீதம்
21 - 40 வயது - 42 சதவீதம்
41 - 60 வயது - 32 சதவீதம்
60 வயதுக்கு மேல் - 17 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.