tamilnadu

img

திருச்செங்கோடு அகரம் ஏரி புனரமைப்புப் பணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாமக்கல், செப்.12- திருச்செங்கோடு வட்டம், அகரம் ஏரி புனர மைப்புப் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.517 லட்சம்  மதிப்பீட்டில் 14 பணி களும், மேட்டூர் அணைக் கோட்ட பகுதிகளில்  ரூ.121.40 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள்  மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  திருச்செங்கோடு வட்டம், அகரம் ஏரியில்  ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் மதகு சீர மைப்பு, ஏரியின் கரை கான்கிரீட் சுவர்  அமைக்கும் பணி மற்றும் கரை பலப் படுத்தும் பணி உள்ளிட்ட குடிமராமத்து பணிகளை அகரம் ஏரி நீர் பாசன விவ சாயிகள் சங்கத்தின் மூலமாக நடைபெற்று வருவதை விவசாய சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில்  சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, உதவி பொறியாளர் இளங்கோ, பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.