நாமக்கல்:
குமாரபாளையத்தில் சிறுமி பாலியல் விவகார வழக்கில், குற்றவாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த 2 மகள்களுக்கும் திருமணம் நடந்து விட்டது. 3-வது மகள் (வயது 14) 6-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு அருகில் உள்ள ஒருவரது வீட்டுக்கு தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்தபடி வேலைக்கு சென்று வந்தார்.இந்த நிலையில், அக்காள் கணவன் சின்ராஜ் என்பவர் தனது வீட்டில் தங்கியிருந்த அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமை வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர், அந்தசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து வீட்டின் உரிமையாளரின் உறவினர்கள் பன்னீர், மூர்த்தி, கண்ணன், அபி, கோபி, சேகர், சங்கர், சரவணன் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதனை அறிந்த சின்ராஜின் நண்பர்கள் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தகுமார், வடிவேல், சுந்தரம் உள்ளிட்டவர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.ஒருகட்டத்தில் இது பற்றி தாயாரிடம் கண்ணீர் மல்க சிறுமி தெரிவித்ததை அடுத்து ஊரில் உள்ளவர்கள் பஞ்சாயத்து பேசியதாக கூறப்படுகிறது. பாலியல் பலாத்காரம் செய்த குமார் என்பவரிடம் அவர்கள் பஞ்சாயத்து பேசி ரூ. 10 ஆயிரம் வாங்கி கொடுத்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது குறித்து, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியா, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட விஷயங்களை சிறுமி தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோரிடம் ரஞ்சித பிரியா விசாரித்தார்.இதையடுத்து அவர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஹேமாவதி விசாரணை நடத்தியதில் சிறுமி பலாத்காரம் சம்பவத்தில் பல பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவருகிறது. முதற்கட்டமாக 11 பேர்மீது மிரட்டுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 11 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். தலைமறைவான நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.சிறுமியை சீரழித்த குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். குமாரபாளையத்தில் 14 வயது சிறுமி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்திடுக, அதே வேளையில்முதல் கட்டமாக கைது செய்யப்பட்டவர்களை தவிர்த்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அரசு தக்கபாதுகாப்பு வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகளில் பெண்கள்பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்தில் இருந்து ரூபாய்
ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில இணைச்செயலாளர் சி.பாலசந்திரபோஸ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் தனேந்திரன், மாவட்டச் செயலாளர் படைவீடு பெருமாள், வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட தலைவர் ரவிஉள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் கண்டன உரை நிகழ்த்தினர்.இதில், வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும்பொதுமக்கள் உட்பட பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.