நாமக்கல், செப். 11- நாமக்கல்லில் உள்ள கல்குவாரி யில் அதி திறன் கொண்ட வெடி பொருட்களை பயன்படுத்தக்கூடாது என கனிம வள அதிகாரிகள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எளையாம்பாளையம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இப் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி கள் விதிமுறைகளுக்கு மாறாக 200 அடி ஆழத்திற்கு அதிக திறன் கொண்ட வெடிகளை வைத்து வெடிப்பதன் மூலம் இதன் அருகில் உள்ள குடியி ருப்புகள் விரிசல் ஏற்படுகிறது. மேலும், நிலத்தடி நீரும் கல்குவாரிக்குள் செல்வ தால் விவசாயம் பாதிக்கப்பட்டு வரு கிறது. கிராம சாலைகள் குண்டும், குழி யுமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது. கல்குவாரியில் வெடி வைப்பதால் சிதறும் கற்கள் இப்பகுதி யில் செல்லக்கூடிய பொதுமக்கள் மீது பட்டு காயங்கள் ஏற்பட்டு வருகின்ற னர். இந்நிலையில், கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு குவாரிகளின் வழியாக உள்ள கிராம சாலைகளில் பள்ளி மாண விகள் நடந்து செல்லும் போது அவர் கள் மீது வெடி கற்கள் விழுந்தால் அவர்கள் மீது காயங்கள் ஏற்ட்ட நிலை யில் கல்குவாரி உரிமையாளர்கள் மீது எலச்சிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், விதிகளுக்கு புறம்பாக இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து கனிம வள பாது காப்பு இயக்குனர் மற்றும் மாவட்ட உதவி இயக்குனர் ஆகியோர் எளை யாம்பாளையம் கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், வெடி வைப்பதற்கு தகுதி உள்ள வர்களை வைத்து தான் வெடி வைக்க வேண்டும். அதிக வெடித்திறன் கொண்ட வெடி பொருட்களை பயன்ப டுத்தக் கூடாது. வெடி வைப்பதற்கு முன் பாதுகாப்பை முன்னிறுத்தி பயன் படுத்த வேண்டும். இதனால் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். இது போன்ற விதிகளை கடைப்பிடிக்காத சூழ்நிலையில் கல் குவாரிகள் வெடி வைப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என கனிம வள அதி காரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.