உலகம் முழுவதும் கோவிட் 19 தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் 25 பேர் இறந்துள்ளனர். அதேநேரத்தில் குமரி மாவட்ட நிர்வாகம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 தொற்று சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தியுள்ளது. இதில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த கோவிட் 19 சிகிச்சை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் இதில் சிகிச்சை பெற்ற 7 பேர் இறந்துள்ளனர். சனியன்று ஒரே நாளில் 3 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஞாயிறன்று காலை அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த குமரி மாவட்டம் ராமநாதபுரத்தை சேர்ந்த உதயகுமார் (56) என்பவர் இறந்தார். இவரது ரத்தம், சளி பரிசோதனை முடிவுகளும் இன்னும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களின் விவரம் வருமாறு:
1, ஜாண் (49), ஹோலி கிராஸ்.
2, எஸ்தர் ராணி (56), ராமன்புதூர்
3, ஜெகன் (45), கோடிமுனை.
4, மரிய ஜாண் (66), இராஜக்கமங்கலம் துறை.
5, 2 வயது ஆண் குழந்தை, முட்டம்.
6, ராஜேஷ் (24), திருவட்டார்.
7, உதயகுமார் (56), சாமிநாதபுரம்.
இந்த இறப்புகள் குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.