சீர்காழி, ஜூன் 6- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் இளங்கோவன், பி.டி.ஓ ஜான்சன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயபாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உறுப்பினர் அங்குதன் பேசுகையில், கொள்ளி டம் வட்டாரப் பகுதியில், விவசாய துறை சார்பில் மானிய விலை யில் வழங்கும் கைத்தெளிப்பான் உள்ளிட்ட விவசாய கருவி கள், ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தகுதியான நபர்களுக்கு வழங்காதது ஏன் என்றார். உறுப்பினர் சிவபாலன் பேசுகையில், அளக்குடி, முதலை மேடு, காட்டூர், ஆச்சாள்புரம் ஆகிய கிராமங்களில் ஏற் பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்கவும், பழமையான மின்கம்பங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காட்டூரிலிருந்து வடரெங்கம் வரை மிகவும் மோசமாக உள்ள கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என்று ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர் கோரிக்கை விடுத்தார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் அறிக்கை வாசித்தார். நிறைவாக ஒன்றிய மேலாளர் கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.