tamilnadu

img

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

நாகை, செப்.11- கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியுள்ளது.
     நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த செவ்வாயன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி கப்பலால் மீனவர்களின் படகை மோதியதில் 4 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.