மயிலாடுதுறை, ஜன.11- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கல்லூரியின் பீக்காக் பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் செயலர் கி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லூரி மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனையடுத்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல்கள், மேற்கத்திய நடனம், என்சிசி மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏவிசி கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், பொறியியல் கல்லூரி முதல்வர் சி.சுந்தர்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.கண்ணன் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.