மும்பை:
கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இருந்த நேரத்தில்- அதாவது நவம்பர் மாதத்தில் மட்டும்சுமார் 300 விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.மேலும், நான்கு ஆண்டுகளுக்குப் பின், தற்போதுதான்ஒரே மாதத்தில் முந்நூற்றுக்குமேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன் 2015-ஆம் ஆண்டிலும், இந்த அளவுக்கு விவசாயிகளின் தற்கொலை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.2019ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் அபரிமிதமாகப் பெய்தமழையால், சுமார் 70 சதவிகிதம் விவசாய நிலங்கள் நீரில்மூழ்கி அழிந்ததே, விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தற் கொலை செய்துகொண்ட விவசாயிகளோடு ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டில், வழக்குகளின் எண்ணிக்கை 61 சதவிகிதம் உயர்ந்துள்ளது என மாநில வருவாய்த்துறை அளிக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்டோபரில் 186 விவசாயிகளும் நவம்பரில் 114 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டதாகத் அரசுப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. வறண்ட மாநிலமான மாரத்வாடாவில் நவம்பர் 2019-இல்மட்டும் 120 வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கும் பகுதியான விதர்ப்பாவில் 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.