மும்பை:
குடியரசு தினத்தில் இருந்து அனைத்துப்பள்ளிகளிலும் அரசியலமைப்பு முகவுரையை வாசிப்பது அறிமுகப்படுத்தப் படும் என்று மகாராஷ்டிர மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க் வாட் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வர்ஷா கெய்க்வாட் மேலும் கூறியிருப்பதாவது:அனைத்துப் பள்ளிகளிலும் அரசியலமைப்பு முகவுரையை வாசிப்பது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குடியரசு தினத்தில் இருந்து, இந்த முறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டாயமாக்கப் படும். காலை பிரேயருக்குப் பிறகு மாணவர்கள் இதை வாசிப்பர்.இதன்மூலம் குழந்தைகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் தெரியவரும். அதுசார்ந்த மற்ற சட்டங்கள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்வர்.ஒரு மாணவர் தினந்தோறும் அரசியலமைப்பின் முகவரியை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டால், தான் ஓர்இந்தியக் குடிமகன் என்பதை அவர் உணர்ந்துகொள்வார். அதேபோல அரசியலமைப்புக் கூறுகளையும் அதில் பொதிந்துள்ள அர்த்தங்களையும் அவரால் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.