மும்பை:
மத்தியிலும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வந்தது, யாருக்கு லாபமோ இல்லையோ, சாமியார் ராம் தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனத்திற்கு கொழுத்த லாபம்.கார்ப்பரேட் என்ற வகையிலேயே, அரசின் சலுகைகளை அள்ளிக் குவிக்கலாம் என்றாலும், பிரதமர் மோடியுடனும்,ஆளும் பாஜக-விலும் தனக்கு இருக்கும்செல்வாக்கைப் பயன்படுத்தி, ராம்தேவ்இன்னும் ஒருபடி கூடுதலாக ‘சலுகைகள்’ என்ற பெயரில், விவசாயிகள் மற்றும்அரசின் நிலங்களைக் கபளீகரம் செய்துவருகிறார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் மீகானில், உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை அமைக் கப் போவதாக கூறி, சுமார் 347 ஏக்கர் நிலத்தை, ராம்தேவின் பதஞ்சலி யோகாபீடம் வளைத்துப் போட்டது.கடோல் என்ற இடத்தில், ஆரஞ்சு பதப்படுத்துதல் தொழிற்சாலை அமைக்கப்போவதாக, அங்கும் சுமார் 200 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது.இந்நிலையில்தான், மகாராஷ்டிர மாநிலம் லாட்டூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆஷா என்ற கிராமத்தில், தற்போது சுமார் 400 ஏக்கர் அரசு நிலத்தை, சந்தைமதிப்பைக் காட்டிலும் சரிபாதி குறைவான விலைக்கு, பதஞ்சலி நிறுவனம் சூறையாடியுள்ளது.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விலாஸ்ராவ் தேஸ்முக் கனரக தொழிற் துறை அமைச்சராக இருந்தார். அப் போது, இந்த 400 ஏக்கர் இடம், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)’ நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பெல் தொழிற்சாலை தொடர்பான திட்டம்
எதுவும் செயல்படுத்தப்படாத நிலையில், இந்த நிலத்தை சிறு குறு நடுத்தரநிறுவனங்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது மின் கட்டண சலுகை மற்றும் ஜி.எஸ்.டியில் சலுகை,பத்திரப்பதிவில் சலுகை என்ற ஏராளமான சலுகைகளுடன், 50 சதவிகித அடிமாட்டு விலைக்கும் 400 ஏக்கர் நிலம்பதஞ்சலிக்கு வாரிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதஞ்சலிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட விஷயத்தில், தாங்களும்ஏமாற்றப்பட்டுள்ளதாக விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். தங்களிடம் இருந்து வெறும் 3.5 லட்சம் ரூபாய்க்குமட்டுமே இந்த இடம் வாங்கப்பட்டதாகவும், தற்போது இந்த இடம் 45 லட்சம்ரூபாய் வரை செல்வதாகவும் விவசாயிகள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
இந்த நிலத்தை ஒட்டி தற்போது நெடுஞ்சாலை செல்வதால், ‘பெல்’ நிறுவனம் வரும்பட்சத்தில் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என்றுநினைத்து நிலத்தை வழங்கினோம், ஆனால் அப்படி ஏதும் அமையவில்லை,மாறாக தற்போது பதஞ்சலி நிறுவனம்தான் இங்கு வருகிறது; இதனால்எங்களுக்கு எந்த லாபமும் இல்லை என் றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.நாங்கள் ஒரு தேசிய திட்டத்திற்காகத்தான் இந்த இடத்தை கொடுத்தோம், ஆனால் தற்போது இங்கு தனியார் திட்டம் தான் கொண்டுவரப்படுகிறது. இதற்கு அரசு எங்களுக்கு, சந்தை மதிப்பில் ஈடுகட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே, அடிமாட்டு விலைக்குவாங்கிய 400 ஏக்கர் நிலத்தில், பதஞ்சலிநிறுவனம் சோயா பீன்ஸ் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.