பன்மொழிப் பண்பாட்டு நகரில் வெண்கடல் அலைகள்! ஓசூரில் வாலிபர் சங்க மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது
ஓசூர், அக்.12 - தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி களின் இனிமையான சங்கமம் கேட்கும் கிருஷ்ணகிரி மாவட்டத் தின் மையமான ஓசூர் மாநகரம் முழுவதும் வெண்கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 18ஆவது மாநாடு அக்டோபர் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு இங்கு நடைபெறு கிறது. இளைஞர்களின் வெண்கொடிப் பேரணி இதையொட்டி ஞாயிறன்று ஓசூர் ரயில் நிலையம் முன்பு திண்டுக் கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மாபெரும் வெண் கொடி பேரணியைத் தொடங்கி வைத்தார். 18ஆவது மாநாட்டை வலியுறுத்தும் வகையில் வெண்ணு டை அணிந்த 18 இளைஞர்கள் மாபெரும் வாலிபர் சங்கக் கொடிகளுடன் பேரணியின் முன்ன ணியில் அணிவகுத்தனர். தமிழகத்தின் 38 மாவட்டங்களி லிருந்தும் வந்த பல்லாயிரக்கணக் கான இளைஞர்கள், தாரை, தப்பட்டை, ஆட்டம் பாட்டம் கொண் டாட்டங்களுடன் மாவட்ட வாரியாக அணிவகுத்தனர். “சமத்துவ தமிழ்நாடு; சமர்புரியும் வரலாறு “ என்ற கொள்கை முழக்கத்துடன், தங்கள் மாவட்டப் பிரச்சனைகளை பதாகைகளிலும் பேனர்களிலும் சுமந்துவந்தனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை, திருவண்ணாமலை, சேலம், கோவை, மதுரை, தூத் துக்குடி, தஞ்சாவூர், திருச்சி என தமிழகத்தின் ஒவ்வொரு மூலையி லிருந்தும் வந்த இளைஞர்களின்