tamilnadu

img

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மகளிர் ஓபன் டென்னிஸ்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு  சென்னையில் மகளிர் ஓபன் டென்னிஸ்

சென்னை, ஜூலை 17 - சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு நடை பெற்றது. அதன் பிறகு இந்த போட்டியை நடத்தும் உரிமம் சென்னைக்கு கிடைக்க வில்லை. இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ் நாடு டென்னிஸ் சங்கத்துக்கு சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் வழங்கியுள்ளது. இது குறித்து சென்னை யில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறுகையில், “சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த போட்டி யில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள்” என்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடை பெறவுள்ள இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள். இரட்டையர் பிரிவில் 16 இணைகள் அதா வது 32 வீராங்கனைகள் கள மிறங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். எங்களது தீவிர முயற்சி யின் பலனாக மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னைக்கு திரும்பியுள் ளது. இதற்கு பக்கபலமாக இருந்த தமிழ்நாடு அரசுக் கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக் கும் நன்றி என்று விஜய் அமிர்தராஜ் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றி லேயே இந்திய வீராங்கனை கள் அனைவரும் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டென்னிஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.