tamilnadu

img

இன்று தோழர் பி.ஆர். நினைவு சொற்பொழிவு பி.சாய்நாத் பேசுகிறார்

இன்று தோழர் பி.ஆர். நினைவு சொற்பொழிவு பி.சாய்நாத் பேசுகிறார்

தஞ்சாவூர், அக். 15 - விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பி. ராமமூர்த்தி அவர் களின் நினைவுச் சொற் பொழிவு நிகழ்ச்சி, வியாழ னன்று (அக். 16) மாலை 5  மணிக்கு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறுகிறது. சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை. பாண்டியன் தலை மையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், “பெருகி வரும் விவசாய நெருக்கடியும்- விவசாயிகளின் வாழ்நிலையும்” என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத் கருத்துரையாற்றுகிறார். கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன், தோழர் பி. ராம மூர்த்தியின் மகளும் மூத்த  வழக்கறிஞருமான ஆர். வைகை ஆகியோர் சிறப்புரை யாற்றுகின்றனர். தோழர் பி. ராமமூர்த்தியின் சட்டமன்ற - நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு இரண்டாவது பாகம் நூல் வெளியிடப்படுகிறது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார் வெளியிட மூத்த தலைவர் என். சீனிவாசன் பெற்றுக்கொள்கிறார்.