மதுரை, ஏப்.14-மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பீ.பீ குளம் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுகவினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் முன்னாள் மேயரும்வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா, மகன்ராஜ்சத்யன், அமமுக சார்பில் டேவிட்அண்ணாதுரை உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு கூட்டணி கட்சியினர் மற்றும் மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக ஊடகம் மற்றும் செய்தித்தாள்களில் கருத்து கணிப்புகள் வந்த நிலையில், ஆளும் அதிமுகவினர் பணத்தை மட்டுமே நம்பிகளத்தில் நிற்கின்றார்கள். வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் தவிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம் மட் டுமே நடைபெற்ற நிலையில் வேறு தலைவர்களின் பிரச்சாரம் எதுவும் இங்குநடைபெறவில்லை. பிரதமர் மோடி மதுரையில் தங்கி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியனுக்கு ஆசீர்வாதம் மட்டும் செய்துவிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல் வம் மகன் ரவீந்தரநாத்துக்கு பிரச்சாரம் செய்ய தேனி சென்றுவிட்டார். இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணத்தைகொடுத்து மட்டுமே வாக்குகளை பெறவேண்டும் என்ற நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,கூட்டணி கட்சியினரை சேர்ந்த நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடமும் தேர்தல் அதிகாரிகளிடமும் கொடுக்கின்றனர்.
பல பகுதிகளில் தகவல் கொடுத்தும்காவல்துறையோ, தேர்தல் பறக்கும் அதிகாரிகளோ வருவதில்லை என்று மாவட்டதேர்தல் அதிகாரியிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. சில காவல்நிலையங்களில் பிடித்து கொடுக்கப்படும் ஆளும் கட்சி நபரிடம் குறைவான தொகைதான் உள்ளது என்றுவழக்கு பதிவு செய்து விட்டு அவர்களைவிடுவித்து விடுகின்றார்கள். சனியன்றுஇரவு பீ.பீ.குளம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அதிமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர்வீட்டில் பணம் வைத்துள்ளார். தகவல்தெரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராதா, பகுதிக்குழு செயலாளர் ஏ.பாலு மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் முத்து, ஜீவா, ஜெயவேல், திமுகவை சேர்ந்த ரவி, மாயழகன் ஆகியோர் பணத்தை எடுத்து காவல்துறை மற்றும்தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அதேபோல் ஞாயிறு அன்று மீனாட்சிபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம்கொடுத்து கொண்டிருந்த அதிமுகநபர்களையும் பிடித்து கொடுத்துள்ளார் கள்.
புதூர் சர்வேயர் காலனி பகுதியில்உள்ள அல் - அமீன் நகரில் சிபிஎம் மேற்குஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் அப்பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த அதிமுகவை சேர்ந்த முத்தையா, கன்னிச்சாமி, வேல்முருகன் ஆகியோரை பணத்துடன் பிடித்துள்ளார். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் பணம் கொடுக்கப்படுகின்றது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர் மா.கணேசன் தலைமையில் அப்பகுதி கட்சி நிர்வாகிகளுடன் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி மதுரை நகர் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளும் கட்சி அதிமுக நிர்வாகிகள் 25 பேருக்குஒரு நபர் என்ற விதத்தில் பணம் கொடுத்துவருகின்றார்கள். ஆனால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை கண்துடைப்பாகவும், அலட்சியமாகவும் உள்ளது என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிகட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.