tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

மதுரை, பிப்.27- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாகருங்காலக்குடியில் முஸ்லிம் ஜமாத்,கிராம மக்கள், சுற்றுவட்டார அனைத்துமஹல்லா ஜமாத் அத்கள் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரி வித்து  புதனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கருங்காலகுடி ஜமாத் தலைவர் எம்.ஏ.சக்கரைப்பீர், தலைமை வகித்தார்.  ஜமாத் தலைவர்கள் எஸ்.இப்ரா ஹிம்சா, ஏ.சேக்தாவூத், எஸ்.ஏ.லியாகத் அலி, அ.சக்கரைபீர், ஏ.கபீர் (மிராமைதீன்) ஏ.காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரா மத் தலைவர் எஸ்.இரா ஜேந்திரன், துணைத் தலை வர் ஆர்.சண்முகவேல், நகர நாட்டாமை சுப.ரத்தினம் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டனர்.  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திராவிட இயக்க சிந்தனை யாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாடுகரும்பு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் என்.பழனிச் சாமி,  வழக்கறிஞர் ஹென்றி திபேன்,  சிபிஐமாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ்,  வழக்கறிஞர் செ.வாஞ்சி நாதன், மருதுமக்கள் இயக்கம்  சார்பில் செ.முத்துப் பாண்டி, சுய ஆட்சி இந்தியா தலைவர் கே.பால கிருஷ்ணன், திவிக மாவட்டச் செயலாளர் மணி அமுதன் மா.பா. ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.