tamilnadu

img

தமிழ்நாடு அரசு சார்பில் மாபெரும் பாராட்டு விழா இளையராஜாவை கவுரவித்தார் முதல்வர்

தமிழ்நாடு அரசு சார்பில் மாபெரும் பாராட்டு விழா இளையராஜாவை கவுரவித்தார் முதல்வர்

சென்னை, செப்.13- இசைஞானி இளையராஜா வுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாபெரும்  பாராட்டு விழா சனிக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  இளையராஜாவின் 50-ஆண்டு கால இசைப் பயணத்தை கவுர விக்கும் விதமாகவும், லண்டனில் அவர் அரங்கேற்றிய சிம்பொனி இசைச் சாதனையை பாராட்டும் வித மாகவும் இவ்விழா நடத்தப்பட்டது. இதில், இளையராஜா, சிம் பொனி இசைக்குழுவுடன், மீண்டும்  தனது சிம்பொனி இசைக் கோர்வை யை அரங்கேற்றினார். டிஜிட்டல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு 5.40 மணிக்கு இசை ஞானி இளையராஜாவும் முதல மைச்சரும் வந்தனர்.  அப்போது விண்ணை முட்டும் கரவொலி, ஆர வாரத்துடன் ரசிகர்கள் வரவேற்ற னர். அமுதே... தமிழே... அழகிய மொழியே... என்ற இசைஞானி பாட  ஏராளமான கலைஞர்கள் இசைக்க  நிகழ்ச்சி தொடங்கியது. முதல் ஒரு  மணி நேரம் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி அரங்கத்தையே அதிர வைத்தது. ஒவ்வொரு பாடல்களும் நினைவுகளைக் கண்முன் நிழ லாடச் செய்தன. இந்த இசை நிகழ்ச்சி  அனைவரையும் பரவசப்படுத்தி யது. பண்ணைபுரத்திலிருந்து லண் டன் வரை சென்று தமிழகத்தின் பெரு மையை பறைசாற்றிய அந்த சிம்  பொனி அரங்கேறியதும் அரங்கமே  அதிர்ந்தது. பின்னர், “சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன்’ இசைஞானி இளை யராஜா – பொன்விழா ஆண்டு  50” என்ற தலைப்பில் நடந்த விழா வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுர வித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்க, தமிழ்த்திரையுலகின் மூத்த கலை ஞர்களான கமல்ஹாசன், ரஜினி காந்த், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட ஏராளமான திரை உலக பிரபலங் கள் விழாவில் பங்கேற்று இசை ஞானி இளையராஜாவை வாழ்த்தி னர். அரசு நடத்திய பாராட்டு விழா வில், கலைத்துறை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அமைச்சர்கள், அர சியல் பிரமுகர்கள், அரசு உயர் அதி காரிகள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்றனர். 50 ஆண்டுகளாக தமிழ்த் திரை யிசைத்துறையில் முக்கிய பங்க ளிப்பை வழங்கி, ஒட்டுமொத்த தமி ழர் உலகமே கொண்டாடும் இசை யமைப்பாளராக விளங்கும் இளை யராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில்  அளிக்கப்பட்ட இந்த கவுரவம் தமிழ்  இசைத்துறை வரலாற்றில் ஒரு முக்கி யமான நிகழ்வாகும்.