மதுரை:
கொரோனா தொற்றால் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக லட்சக்கணக்கான தொழிலாளர்களை வாழவைக்கும் திருப்பூரில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியளிப்பது வேதனையான விஷயம்.
இந்த நிலையில் இரும்பு, சிமெண்ட், உரம், சுத்திகரிப்பு ஆலைகள் உட்பட 13 வகையான ஆலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் என மத்தியஅரசை வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் "விதிகளுக்குட்பட்டு" 12 ஆலைகளை திறக்க அனுமதித்துள்ளது.
குறைந்தது ஒவ்வொரு தொழிற்சாலையிலும் 500 தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். ஆலைகளை எப்போது வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம். ஆனால் பணிக்குச் செல்லும் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பங்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.