எல்.ஐ.சி-இன் இணையதளம் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-இன் இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்த பயனர்கள், எல்.ஐ.சி-இன் ஆன்லைன் சேவையை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எல்.ஐ.சி இணையத்தளத்தில் ஆங்கில மொழியை தேர்வு செய்திடும் விருப்பத்தையும் இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எல்.ஐ.சி-இன் இணையதளத்தில் இந்தி திணிப்புக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனது இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது.
ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் "பாஷை" என்று எழுதியிருக்கிறார்கள்.
எல்.ஐ.சி-இன் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கண்டிக்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.