tamilnadu

img

போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம் 

பாபநாசம், அக். 12-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.  இதில், திமுக மெலட்டூர் பேரூர் செயலாளர் சீனு, டாக்டர்கள் அஜந்தன், ரதிவதனிகா, சுபஶ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர். இதே போன்று மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமில் முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனி, அங்கன்வாடி பணியாளர் பிரேமா தேவி, உதவியாளர் கமலா உட்பட பலர் பங்கேற்றனர்.  பாபநாசம் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில் டாக்டர்கள் சுஜித்ரா, கிருத்திகா, நிர்மல்குமார், பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் முருகவேலு, உதவி ஆளுநர் பக்ருதீன் அலி அகமது உட்பட பலர் பங்கேற்றனர்.