tamilnadu

பாலஸ்தீன அங்கீகார தீர்மானம் ஐ.நா.வில் மீண்டும் நிறைவேறியது

பாலஸ்தீன அங்கீகார தீர்மானம் ஐ.நா.வில் மீண்டும் நிறைவேறியது

இந்தியா உட்பட  142 நாடுகள் ஆதரவாக வாக்கு

நியூயார்க், செப்.13- பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடு கள் அவையில் மீண்டும் நிறைவேறியது.  பிரான்ஸ் அறிமுகம் செய்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உட்பட 142 நாடுகள் வாக்க ளித்தன. பாலஸ்தீனம் தொடர்பான பிரச்ச னையை அமைதியான முறையில் தீர்ப்  பது, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயார்க் பிர கடனத்தை’ ஐ.நா அவையில் பிரான்ஸ் அறிமுகப்படுத்தியது. ‘காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இரு நாடுகளை யும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்ப தன் அடிப்படையில் இஸ்ரேல்-பாலஸ்  தீன போருக்கு நியாயமான, அமைதி யான மற்றும் நீடித்த தீர்வை கொண்டு  வருவதற்கும், பாலஸ்தீனர்கள், இஸ்ரே லியர்கள் உள்ளிட்ட அப்பிராந்தியத்தில் வாழ்ந்து வருகின்ற அனைத்து மக்க ளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உரு வாக்குவதற்கும் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்துக்கு அர்ஜெண்டினா, ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடு கள் எதிராக வாக்களித்தன.  அதேநேரம் இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 12  நாடுகள் வாக்களிக்கவில்லை.