ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை
சென்னை, அக்.12 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 17-ல் தொடங்கிய சில மணி நேரத்திலேயே முழு மையாக விற்பனையானது. அரசு பேருந்துகளிலும் 20,000 பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், முன்பதிவுகள் முடி வடையும் நிலையில் உள் ளன. இதனால் பயணிகள் ஆம்னி பேருந்துகளை நம்பி யுள்ளனர். கட்டண உயர்வு விவரம் - சென்னை-நெல்லை: ₹1,800-ல் இருந்து ₹5,000 - சென்னை-மதுரை: ₹1,100-ல் இருந்து ₹4,100 - சென்னை-கோவை: ₹1,200-ல் இருந்து ₹3,000 - சென்னை-திருச்சி: ₹600- 900-ல் இருந்து ₹3,600 அமைச்சர் எச்சரிக்கை இதுதொடர்பாக அரிய லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “10-க்கும் மேற் பட்ட தனியார் ஆம்னி பேரு ந்துகள் அதிக கட்டணம் வசூ லிப்பதாகத் தகவல் வந்துள் ளது. அவை தாங்களாகவே கட்டணத்தைக் குறைக்கா விட்டால், தீபாவளிக்கு முன்பே கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்ச ரித்தார். போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.