tamilnadu

img

நேபாள அரசியல் நெருக்கடி: ஓர் ஆய்வு - எஸ்.பி.ராஜேந்திரன்

நேபாள அரசியல் நெருக்கடி: ஓர் ஆய்வு

இமயமலைச் சரிவுகளில் அமைந்துள்ள நேபாளம் 2025 செப்டம்பரில் தனது வர லாற்றிலேயே மிகக் கடுமையான அரசி யல் நெருக்கடியை எதிர்கொண்டது. இந்த நெருக்கடியை புரிந்துகொள்ள 1996 பிப்ரவரி யில் பிரச்சந்தா (புஷ்பகமல் தஹால்) தலைமை யிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ யிஸ்ட்) தொடங்கிய ‘மக்கள் யுத்தம்’ முதல் ஆராய வேண்டும். நூற்றாண்டுகளாக ஷா வம்ச மன்னராட்சி யின் கீழ் இருந்த நேபாளத்தில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை, சாதி அடிப்படையிலான பாகு பாடு, பல இன அடையாள அழிப்பு, பாலின ஏற்றத் தாழ்வு ஆகியவை தொடர்ந்து கொண்டிருந்தன.

 நீண்ட காலமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் - யுஎம்எல்)  இதற்கு எதிராக போராடி வந்த நிலையில், 1990 இல் எழுச்சி பெற்ற ஜன அந்தோலன் (மக்கள் இயக்கம்) அரசியலமைப்பு சபையை நிறுவிட வழிகோலியது. எனினும், அடிப்படை சமூக மாற்றங்கள் நடைபெறவில்லை. ஏற்கெனவே 1964 இல் மன்னர் மகேந்திரா இயற்றிய நிலச் சட்டம், நில உச்சவரம்பைக் கொண்டுவந்தது; ஆனால் அதன் அமலாக்கம் மிகவும் பலவீன மாக இருந்தது. இந்தப் பின்னணியில் எழுந்த மாவோ யிஸ்ட் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைக ளில் நிலச் சீர்திருத்தம், சமூக சமத்துவம், பல இன சமூகங்களுக்கான உரிமைகள், மகளிர்  விடுதலை, மன்னராட்சி முறை ஒழிப்பு, குடி யரசு அமைப்பு ஆகியவை அடங்கும். பத்து  ஆண்டுகள் நீடித்த இந்த ஆயுதப் போராட்டத் தில் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் 8,000 மாவோயிஸ்ட் போராளிகள், 4,500 அரசு பாதுகாப்பு படையினர், 2,500க்கும் மேற் பட்ட பொதுமக்கள் அடங்குவர். அமைதி உடன்படிக்கை மற்றும் குடியரசாக மாற்றம் 2005 இல் மன்னர் ஞானேந்திரா அவசர நிலையை அறிவித்து நேரடி ஆட்சியைக் கைப் பற்றியது, மாவோயிஸ்ட்களுக்கும் ஜனநாயக கட்சிகளுக்கும் இடையில் கூட்டணியின் அடிப் படையை உருவாக்கியது.

2006 ஏப்ரல் மாதம் மாவோயிஸ்ட்கள் ஒருபக்க போர்நிறுத்தம் அறி வித்தனர். ஏப்ரல் 6 முதல் 24 வரை நடந்த மக்கள் எழுச்சியின் அழுத்தத்தால் மன்னர் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டி யிருந்தது. இந்த மாபெரும் எழுச்சியின் இடையே, மாவோயிஸ்டுகள் பொது நீரோட்டத்தில் முழுமையாக இணைவது தொடர்பான தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைக ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத் தான தலைவர்கள் ஹர் கிஷன் சிங் சுர்ஜித், சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் பெரும் பங்கு வகித்தார்கள் என்பது வரலாறு. 2006 நவம்பர் 21-22 அன்று கையெழுத்தான விரிவான அமைதி உடன்படிக்கை (Compreh ensive Peace Accord) நேபாள வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த உடன் படிக்கை மாவோயிஸ்ட் மக்கள் விடுதலை இராணுவத்தை கண்டோன்மென்ட்களாக (cantonments) - அதாவது, உள்நாட்டுப் பகுதிகளில் இருப்பு ராணுவ படைகளாக மாற்றியது; ஐ.நா. கண்காணிப்பின் கீழ் ஆயுத மேலாண்மையை வைத்தது, அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கும் குடியரசு மாற்றத் திற்கும் வழி வகுத்தது. 2007 முதல் 2011 வரை ஐக்கிய நாடுகள் சபை யின் நேபாள கண்காணிப்பு பணி (UNMIN) நடைபெற்றது. 2008 மே 28 அன்று அரசியல் நிர்ணய சபை 240 ஆண்டுகால ஷா வம்ச மன்னராட்சி அமைப்பை முறையாக ஒழித்து குடியரசை அறிவித்தது

இது நேபாள மக்களின் நீண்டகால போராட்டத்தின் மகத்தான வெற்றியாகும். குடியரசுக் காலத்தின்  அரசியல் நிலையின்மை குடியரசு அறிவிப்புக்குப் பிறகு நேபாளம் கடுமையான அரசியல் நிலையின்மையைச் சந்தித்தது. 2008 முதல் 2025 வரை 17 ஆண்டுகளில் சுமார் 13-14 வெவ்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தன. குடியரசு ஆன பின்னர் கிரிஜா பிரசாத் கொய் ராலா (நேபாள காங்கிரஸ்) முதல் பிரதமராக 2008 மே முதல் ஆகஸ்ட் வரை பதவியில் இருந்தார். பிரச்சந்தா (மாவோயிஸ்ட்) ஆகஸ்ட் 2008 முதல் மே 2009 வரை பிரதமராக இருந்து அமைதி செயல்முறையை முன்னெடுத்தார், ஆனால் இராணுவத் தலைவர் நியமன சர்ச்சை யில் பதவி விலக வேண்டியது வந்தது. மாதவ் குமார் நேபாள் (நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி -யுஎம்எல்) மே 2009 முதல் பிப்ர வரி 2011 வரை அரசியலமைப்பு எழுதும் செயல் முறையை நடத்தினார். ஜலநாத் கனால் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - யுஎம்எல்) 2011 பிப்ரவரி-ஆகஸ்ட் வரை குறுகிய காலம் ஆட்சி யில் இருந்தார். பாபுராம் பட்டராய் (மாவோ யிஸ்ட்) ஆகஸ்ட் 2011 முதல் மார்ச் 2013 வரை பிரதமராக இருந்து, 2015 இல் நிறைவேறிய அரசி யலமைப்பிற்கான அடிப்படையை தயாரித்தார். கம்யூனிஸ்ட் அரசுகளின் சாதனைகள் மற்றும் தோல்விகள் குடியரசு ஆன பின்னர், மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் செல்வாக்கு பெரிய அளவில் தேர்தல்களில் பிரதிபலித்தது. கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான அரசு கள் பல முக்கிய சாதனைகளைச் செய்தன. மின் சார இணைப்பு 99 சதவீதமாக அதிகரித்தது, பல நீர்மின் திட்டங்கள் அமைக்கப்பட்டன.

குழந்தை வறுமை 2015 இல் 36 சதவீதமாக இருந்தது 2025 இல் 15 சதவீதமாகக் குறைந் தது. மனித வளர்ச்சிக் குறியீட்டில் நேபாளம் சில முன்னேற்றங்களைக் கண்டது. 2018 இல் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம் எல்) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஒன்றிணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கின. இது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஏனென் றால் 2017 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 75 சதவீத இடங்களை வென்றிருந்தன. ஆனால் இந்த ஒருங்கிணைப்பு 2021 இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சிதைந்தது. கட்சிக் குள் கே.பி.சர்மா ஒலி மற்றும் பிரச்சந்தா இடையே ஆழமான கொள்கை வேறுபாடுகள் மற்றும் அதி காரப் போட்டி இருந்தது. நீதிமன்றம் கட்சி பதிவு செயல்முறையில் முறைகேடுகள் இருந்ததாகக் கண்டறிந்து ஒருங்கிணைப்பை ரத்து செய்தது. அமைதி உடன்படிக்கையின் அமலாக்கத்தில் அக்கறையின்மை அமைதி உடன்படிக்கையின் முக்கிய வாக்குறுதிகள் பல நிறைவேறாமல் போனது நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு அடிப்ப டைக் காரணமாகும். மாவோயிஸ்ட் மக்கள் விடு தலை இராணுவம் மற்றும் நேபாள இராணு வத்தின் ஒருங்கிணைப்பு மிக மெதுவாகவே நடைபெற்றது. 2007 இல் சுமார் 19,000 மாவோயிஸ்ட் போராளிகள் 28 கண்டோன் மென்ட்களில் வைக்கப்பட்டனர், ஆனால் 2011 வரை ஒருங்கிணைப்பு செயல்முறை தொடங்கவே இல்லை. இறுதியில் சுமார் 1,400 மாவோயிஸ்ட் போராளிகள் மட்டுமே நேபாள இராணுவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டனர். 6,500 பேருக்கு தன்னார்வ ஓய்வு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள பெரும்பான்மையான முன்னாள் போராளிகள் சிவில் வாழ்க்கைக்கு திரும்ப போதிய உதவி பெறவில்லை, இதனால் பலர் கைவிடப்பட்ட உணர்வுக்கும் சமூக-பொரு ளாதார ஒதுக்கலுக்கும் ஆளாக நேரிட்டது. போர்க்கால வன்முறைகளுக்கு  பொறுப் புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி என்பவை நிறைவேறவே இல்லை.

2015 இல் அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லி ணக்க ஆணையம் மற்றும் காணாமல் போனோர் விசாரணை ஆணையம் ஆகிய இரண்டும் மெதுவான முன்னேற்றத்தையே காட்டின. போர்க்காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. அரசியலமைப்பு சாதனைகள்  மற்றும் சர்ச்சைகள் 2015 செப்டம்பர் 20 அன்று நேபாளம் தனது புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியது. இது பல வரலாற்றுச் சாதனைகளைக் கொண்டி ருந்தது. நேபாளம் ஏழு மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி நாடாக மாற்றப்பட்டது. மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது, இது இந்து ராஜ்யத்தின் முடிவைக் குறித்தது. பல்வேறு இன, மொழி, மத சமூகங்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டது

பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் சம பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த அரசியலமைப்பு பரந்த எதிர்ப் பையும் சந்தித்தது. மாதேசி, தரு போன்ற சமூ கங்கள் போதிய பிரதிநிதித்துவம் இல்லை, புதிய குடியுரிமைச் சட்டம் பல குடும்பங்களைப் பாதிக்கும், மாநில எல்லைகள் நியாயமற்றவை என்று விமர்சித்தன. இது 2015-16 இல்  இந்திய எல்லையில் முற்றுகைக்கு வழிவகுத் தது, நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமை யாகப் பாதித்தது. பொருளாதார நெருக்கடியும் வெளிநாட்டுச் சார்புநிலையும் நேபாளத்தின் பொருளாதார நிலைமை குடியரசு அறிவிப்புக்குப் பிறகு அடிப்படையில் மாறவில்லை. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-25 இல் சுமார் 1,400 அமெரிக்க டாலர் மட்டுமே, இது தெற்காசிய நாடு களிலேயே மிகக் குறைவு. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12-27 சதவீதம் வரை வெளிநாடுகளில் வேலை செய்யும் நேபாள தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் இருந்து வருகிறது. நேபாளத்தில் மொத்தமுள்ள 3.1 கோடி மக்கள்தொகையில் சுமார் 5,34,500 பேர் வெளி நாட்டில் வேலை செய்கின்றனர். இது 1,000 மக்களுக்கு 17.2 பேர் என்ற விகிதமாகும், இது உலகின் மிக அதிக வெளிநாட்டு வேலை விகிதங்களில் ஒன்று. 2000 இல் 55,000 வெளிநாட்டு வேலை அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டன, 2024-25 இல் இது 8,39,266 ஆக பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இவர்கள் முக்கியமாக கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், மலேசியா போன்ற நாடுகளில் கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலையாட்கள், பாது காவலர்கள், டிரைவர்கள் என குறைந்த ஊதிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். உள்நாட்டில் இளைஞர் வேலையின்மை 22.7 சதவீதத்தை எட்டியுள்ளது, மொத்த வேலையின்மை 12.6 சதவீதமாகும். சர்வதேச நிதி நிறுவனத்தின் (IMF) நீட்டிக் கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் நேபாளம் நவதாராளமய கொள்கைகளைப் பின்பற்ற நிர்பந்திக்கப்படுகிறது. உள்நாட்டு வருவாயை அதிகரிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதால் டிஜிட்டல் சேவை வரி மற்றும் கடுமையான வாட் வரி விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

1964 முதல்  நிலச் சீர்திருத்தத் தோல்வி அமைதி உடன்படிக்கையின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான நிலச் சீர்திருத்தம் 19 ஆண்டுகள் கழித்தும் நிறைவேறவில்லை. 1964 இல் மன்னர் மகேந்திரா காலத்தில் இயற்றப்பட்ட நிலச் சட்டத்தின் பலவீனமான அமலாக்கம் தொடர்ந்தது. பல்வேறு கணக் கெடுப்புகளின்படி 20-25 சதவீதம் வரையி லான குடும்பங்கள் இன்னும் நிலமற்றவர்க ளாகவே உள்ளன. பெரிய நில உடைமையாளர்கள் மற்றும் உயர டுக்கு குடும்பங்கள் தொடர்ந்து விவசாய நிலங்களையும் நகர்ப்புற ரியல் எஸ்டேட்டையும் கட்டுப்படுத்துகின்றன. முற்றிலும் நிலமற்ற, ஓரளவு நிலமுள்ள குடும்பங்கள் விவசாயக் கூலி களாக அல்லது வேலைக்காக இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல நில உடைமையாளர்கள் நிலத்தைப் பயன்படுத்தா மல் விட்டுவிட்டனர் அல்லது மறுவிநியோகத்தி ற்கு பதிலாக குத்தகைக்கு விட்டுவிட்டனர். ‘நெப்போ கிட்ஸ்’களும்  வர்க்க முரண்பாடும் சமீப காலங்களில் ‘நெப்போ கிட்ஸ்’ (Nepotism Kids) என்ற சொல் நேபாளிய சமூக ஊடகங்களில் வைரலானது. இது அரசியல் தலைவர்களின் குழந்தைகளின் ஆடம்பர வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. அரசு அதிகாரிகளின் குழந்தைகள் விலையுயர்ந்த கார்களில் பயணம் செய்வதும், டிசைனர் பிராண்ட்களை அணிந்துகொண்டு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்வதும் உள்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் அல்லாடும் சாதாரண நேபாளிகளுக்கு ஆத்திரத்தை அதிகரித்தது. இது ஆளும் வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க முரண் பாட்டின் கூர்மையான வெளிப்பாடாகும்.

மேலும், ஊழல் குறியீட்டில் நேபாளம் 2024 இல் 180 நாடுகளில் 107ஆவது இடத்தில் உள்ளது, இது 2015 இல் இருந்ததைவிட மோசமான நிலை. பல பெரிய ஊழல் வழக்குகள் முழுமையான விசாரணை இல்லாமல் புதைக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் மக்கள் எழுச்சியால் மன்ன ராட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகப் புரட்சி ஏற் பட்டது என்றாலும், அது, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு முறைக்கு முடிவு கட்டிய வர்க்கப் புரட்சியாக நடைபெறவில்லை; நிலம் உட்பட உற்பத்தி சக்திகள் பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு மாறவில்லை; மாறாக, ஜனநாயக அரசியலமைப்பின் அடிப்படையிலான தேர்தல் முறையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்றன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசியல் உறுதியோடு நிலச்சீர்திருத்தம், தொழில் வளர்ச்சி, வேலை உருவாக்கம், உற்பத்தி சக்திகளை மிக வேகமாக நவீன மயமாக்குவது - போன்ற நடவடிக்கைகளில் துரித கதியில் செயல்படவும், மாற்றுப் பொருளா தாரக் கொள்கைகளை அமலாக்கவும் திட்ட மிடத் தவறினார்கள்; முதலாளித்துவக் கட்சிக ளோடு (நேபாள காங்கிரஸ் உட்பட) சமரசங்கள் செய்து, கூட்டணி ஆட்சி அமைத்தார்கள்.

இவை யெல்லாம், நேபாள மக்களின் - குறிப்பாக இளை ஞர்களை நம்பிக்கையை இழக்கச் செய்தன. செப்டம்பர் 2025: ஜென்-இசட் கிளர்ச்சியின் வெடிப்பு இத்தகைய பின்னணியில்,  செப்டம்பர் 4, 2025 அன்று கே.பி. சர்மா ஒலி அரசு டிக்டாக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களுக்கு திடீர் தடை விதித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி, அரசு இதை “ஒழுங்குமுறை” என்ற பெயரில் நியாயப்படுத்தியது, ஆனால் உண்மையில் இது விமர்சனக் குரல்களை தடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது. இந்த தடை 1995-2010 காலத்தில் பிறந்த ஜென்-இசட் (Gen Z) தலைமுறை இளைஞர்க ளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, மாறாக வாழ்வா தாரத்தின் அடிப்படையாகவும் உள்ளது. பிற வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில், பல இளைஞர்கள் யூட்யூப், டிக்டாக், பேஸ்புக் வீடியோக்கள் மூலம் கன்டென்ட் கிரியேட்டர்க ளாக வேலை செய்து ஓரளவு வருமானம் பெற்று வந்தனர். அரசு விதித்த தடையால் அவர்களின் வருமான மூலம் உடனடியாக துண்டிக்கப் பட்டது. மேலும் நேபாளத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்த குடும்பங்கள் பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊட கங்கள் மூலமே தொடர்பில் இருந்து வருகின்ற னர். தடையால் குடும்பத் தொடர்பு துண்டிக்கப் பட்டது. அழிவுகர நிகழ்வுகள் மற்றும்  அரசின் பதிலளிப்பு பல்லாண்டு கால வாழ்வியல் எதிர்பார்ப்பு கள் கானல் நீராகிக் கொண்டிருக்கும் நிலை யில், ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ள  நேபாள இளம் தலைமுறையினரிடம், சமூக ஊடகத் தடையானது ஒரு பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது.  செப்டம்பர் 8 அன்று ஆவேசத்துடன் தலைநகர் காத்மாண்டு உட்பட வீதிகளில் இறங்கினர்.

இளைஞர்களின் எதிர்ப்பு ணர்வையும்; மன்னராட்சி வீழ்ந்தது முதல் குடியரசைக் கவிழ்க்கவும், எந்த மாற்றங்களும் நடந்து விடாமல் நிலங்கள் உட்பட பெரும் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும் பல சதி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிற எதிர்ப்புரட்சி சக்திகள் இதைப் பயன்படுத்தி கலவரம் செய்வார்கள் என்பதையும் துல்லிய மாக கணிக்கத் தவறிய சர்மா ஒலி அரசு, காவல்துறை மூலம் கடுமையான வன்முறை யுடன் பதிலளித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் “டிஜிட்டல் உரிமைகள்”, “இணைய சுதந்திரம்”, “கருத்துச் சுதந்திரம்” போன்ற முழக்கங்களை எழுப்பினர். ஆனால் செப்டம்பர் 8 மாலை மற்றும் இரவு காவல்துறை ஆர்ப்பாட்டக்கா ரர்கள் மீது நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. செப்டம்பர் 8-9 இல் 20 இளைஞர்கள் கால் துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நேபாள வரலாற்றில் ஒரே நாளில் நடந்த மிகப் பெரிய உயிரிழப்பு. (சனிக்கிழமை பலி எண் ணிக்கை 51 ஆக அதிகரித்து விட்டது). முன்னர் 2006 இல் மன்னர் ஞானேந்திராவுக்கு எதி ரான எழுச்சியின் போது  25 பேர் கொல்லப் பட்டனர்; ஆனால் அது பல வாரங்களாக நீடித்தது. காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மக்களின் கோபத்தை வெடிக்க வைத்தது.

அமைதியான ஆர்ப்பாட்டம் தீவிரமான மக்கள் கிளர்ச்சியாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர் களின் கோரிக்கைகள் சமூக ஊடகத் தடை யைத் தாண்டி விரிவடைந்தன - முழு அரசு அகற்றல், ஊழல் எதிர்ப்பு, பொறுப்புக்கூறல், வேலைவாய்ப்பு உருவாக்கம் என எல்லா கோ ரிக்கைகளும் வீதிக்கு வந்தன. செப்டம்பர் 9 அன்று கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் அனைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளும் கலந்து, அரசின் அடையாளங்கள் மீது தீவிரமான தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்ற கட்ட டத்தை உடைத்து நுழைந்து தீ வைத்தனர். நாட்டின் ஜனநாயகத்தின் அடையாளமான இந்த கட்டடத்தின் பல பகுதிகள் எரிந்து சேத மடைந்தன. நேபாளத்தின் நிர்வாக தலைமை யகமான சிங்க தர்பாரின் ஒரு பகுதி தீக்கிரை யானது, அரசு ஆவணங்கள் அழிக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் உள்ள கட்டடங்கள் தீ வைக்கப்பட்டன. சீதல் நிவாஸ் எனப்படும் ஜனாதிபதி இல்லம் தாக்கப் பட்டது. பலுவாடாரில் உள்ள பிரதமரின் அதிகாரப் பூர்வ இல்லத்தில் மக்கள் உடைத்து நுழைந்து தீ வைத்தனர், கட்டடம் கணிசமான பகுதி சேதமடைந்தது. அரசியல் கட்சி அலுவலகங்களும் தப்ப வில்லை. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)  தலைமையகத்தில் கட்சிக் கொடிகள் கீழே  இறக்கி எரிக்கப்பட்டன. நேபாள காங்கிரஸின் மைய அலுவலகம் முற்றிலுமாக எரிக்கப் பட்டது, கட்சியின் வரலாற்று ஆவணங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் அழிந்தன. அரசியல் தலைவர்கள் மீதான  நேரடி தாக்குதல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அர சியல் தலைவர்கள் மீதான நேரடி வன்முறை இருந்தது. நிதி அமைச்சர் பிஷ்ணு பவுடல் கோபமடைந்த கூட்டத்தால் வீதிகளில் துரத்தப்பட்டார்.

அவர் தாக்கப்பட்டு, உடைகள் கழற்றப்பட்டு, உள்ளாடையுடன் வீதிகளில் அணிவகுக்க வைக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ஜலநாத் கனாலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகர் மீது கொடூர மான தாக்குதல் நடந்தது. அவர் கடுமையாக காய மடைந்து உயிரிழந்தார். பிரதமர் கே.பி. சர்மா ஒலி யின்  இல்லம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் பிரச்சந்தா மற்றும் ஷேர் பகதூர் தூபா ஆகியோரின் இல்லங்களும் தப்பவில்லை. ஹோட்டல்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் கள், கேபிள் கார்கள், கார் ஷோரூம்கள், வங்கி கள் ஆகியவற்றையும் தாக்கினர். நூறு பில்லி யன் நேபாளி ரூபாய்க்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டது. திரிபுவன் சர்வதேச விமான நிலையம் 24 மணி நேரம் மூடப்பட்டது. ஆயிரக் கணக்கான கைதிகள் சிறைகளை உடைத்து விடுவிக்கப்பட்டனர். அரசியல் தலைமையின் சரிவு வன்முறையின் அழுத்தத்தால் பல அமைச் சர்கள் பதவி விலக வேண்டியிருந்தது. காவல் துறையின் தோல்வி மற்றும் மக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கான பொறுப்பாக உள் துறை அமைச்சர் ராஜினாமா செய்தார். விவ சாய அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரும் மக்களின் அழுத்தத்தால் பதவி விலகினர்.

21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பத விகளை விட்டு விலகினர், இது நெருக்கடி யின் ஆழத்தை வெளிப்படுத்தியது. செப்டம்பர் 9, 2025 மாலை பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவி விலகல் கடிதத்தை ஜனா திபதி ராம்சந்திர பௌடேலிடம் சமர்ப்பித்தார். ஒலி தனது ராஜினாமா அறிக்கையில் “அரசி யலமைப்பு தீர்வுக்கான பாதையை வகுக்க” இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். ஆனால் உண்மையில் நிலைமை அரசின் கட்டுப் பாட்டை விட்டு வெளியேறியிருந்தது. பல வதந்திகள் சர்மா ஒலி மற்றும் அவரது அமைச் சர்கள் நாட்டை விட்டு தப்பித்ததாகக் கூறின. மார்க்சிஸ்ட் கட்சியின் அறிக்கை செப்டம்பர் 10, 2025 அன்று இந்திய மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு மிக முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. கட்சி 20 இளைஞர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த துக்கம் தெரிவித்தது.   “மக்களின், குறிப்பாக இளைஞர்களின் எதிர்ப்பானது,  அடுத்தடுத்த அரசாங்கங்க ளின் தோல்விகளால்; அவர்களின் நியாயமான பிரச்சனைகளைத் தீர்க்க மற்றும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாமையால் வளர்ந்த பரந்த கோபத்தை பிரதிபலிக்கின்றது” என்று மார்க்சிஸ்ட் கட்சி மிகச் சரியான முறையில் குறிப்பிட்டது.

எதிர்ப்பின் முக்கியக் காரணங்களாக ஆளும் வட்டங்களில் பரவ லான ஊழல், வளர்ந்து வரும் வேலை யின்மை, சமூக ஊடகத் தளங்கள் மீதான தடை களைக் குறிப்பிட்டது. அதே வேளையில் மார்க்சிஸ்ட் கட்சி இவ் வாறு எச்சரித்தது: “நேபாளத்தின் இளைஞர் கள் மற்றும் ஜனநாயக சக்திகள், தற்போது எழுந்துள்ள சூழ்நிலையை மன்னராட்சி ஆதரவு மற்றும் பிற எதிர்ப்புரட்சி சக்திகள் சுரண்டா மல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வெகுஜன எதிர்ப்புகளின் விளைவு ஜனநாயகத்தை மீட்பதாக இருக்க வேண்டும், நிலப்பிரபுத்துவ எதேச்சதிகார ஆட்சிக்கு மறுபடியும் திரும்புவதாக இருக்கக்கூடாது.” எதிர்ப்புரட்சி ஆபத்துகள் மற்றும்  பிற தலையீடுகள் நேபாளத்தின் நெருக்கடியின் மத்தியில், எதிர்ப்புரட்சி சக்திகள் மக்களின் அதிருப்தி யைப் பயன்படுத்தி தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முயன்றுள்ளன என்பதே மேற்கண்ட மிகப் பெரும் வன்முறைக் காட்சி கள். ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி (RPP) நேபா ளத்தின் முக்கிய மன்னராட்சி சார்பு கட்சியா கும். மார்ச் 2025 இல் இக் கட்சி  மன்னராட்சி மீட்டெடுப்பிற்கான ஆர்ப்பாட்டங்களை ஏற் பாடு செய்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்க ளைத் தாக்கியது நினைவு கூரத்தக்கது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென் றால், தற்போதைய வன்முறையில் ஆர்பிபி கட்சியின் எந்த அலுவலகமும் தாக்கப்பட வில்லை. ஆர் எஸ் எஸ் - சின் சர்வதேச அமைப் பான இந்து ஸ்வயம்சேவக் சங் (HSS), விஸ்வ இந்து மகாசபா, சிவ சேனா நேபாள் போன்ற இந்துத்துவா அமைப்புகள் மதச்சார்பற்ற கொள் கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து இந்து  ராஜ்யம் திரும்ப வேண்டும் என்று கோரு கின்றன. தற்போதைய போராட்டங்களில் பலரது கையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போஸ்டர்கள் காணப்பட்டன.

இது நேபாளத்தின் முதலாளித்துவ - நில பிரபுத்துவ சக்திகள் மத்தியில் இந்திய பாஜக- ஆர்எஸ்எஸ் மாதிரியான இந்து தேசியவாத அரசியலின் செல்வாக்கைக் காட்டுகிறது. அமெரிக்க மில்லீனியம் சேலஞ்ச் கார்ப்ப ரேசன் (MCC) ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கா வின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப் பின்(National Endowment for Democracy) நிதியுதவி பெறும் ஹமி நேபாள் (Hami Nepal) போன்ற அமைப்புகளும் நேபாளத்தில் தீவிர மாக செயல்படுகின்றன. இவை அனைத்திற்கும், வன்முறை மயமாக்கப்பட்ட போராட்டத்திற்கும் தொடர்பும், பங்கும் இல்லாமல் இல்லை என்பதை பல தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.  “உங்கள் வீட்டை நீங்கள் சுத்தமாக வைத்தி ருக்காவிட்டால், முதலில் எறும்புகள் வரும்; பின்னர் பூச்சிகள் வரும்; கடைசியில் கொடிய பாம்புகள் படையெடுக்கும் “ என்கிறது ஒரு லத்தீன் அமெரிக்கப் பழமொழி. அதுதான் இப்போது நேபாளத்தில் நடந்தது. தகவல் ஆதாரங்கள் : நேபாள ஊடகங்கள், பீப்பிள்ஸ் டெஸ்பாட்ச், தி வயர் , ஆசியன் மார்க்சிஸ்ட் ரெவியூ,