மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்துக! ஏப்.22-இல் மாற்றுத்திறனாளிகள் தொடர் முற்றுகை போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.6,000 ஆக உயர்த்துதல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சீர்திருத்தங்கள் கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தொடர் முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: 2025 ஏப்ரல் 22 (செவ்வாய்க் கிழமை) அன்று காலை 10 மணியள வில் சென்னை கோட்டையில் உள்ள எழிலகத்தில் இந்த தொடர் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திற னாளிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
முக்கிய கோரிக்கைகள்
உதவித்தொகை தொடர்பான கோரிக்கைகள்: ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளி களுக்கு அவர்களுடைய ஊனத்தின் தீவிரத்தைப் பொறுத்து மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஓராண்டுக்கும் மேலாக காத்திருப்பதாகவும், பொருத்தமான காரணமின்றி நிறுத்தப் பட்டுள்ள உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 18 வயதிற்குகீழ் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்து, வயது வரம்பு பாராமல் உதவித்தொகை வழங்க வேண்டும். வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மட்டுமே வழங்க வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பான கோரிக்கைகள்
விண்ணப்பிக்கும் மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் தனியாக வேலை அட்டை வழங்குவதுடன், தொடர்ந்து நூறு நாட்கள் முழுமை யாக வேலை வழங்க வேண்டும். 2024 ஆம் ஆண்டின் 8 மணிநேர வேலை உத்தரவை ரத்து செய்து, மீண்டும் 4 மணி நேர வேலையை மட்டுமே உத்தரவாதப்படுத்த வேண்டும். 2 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய பணித்தளத்திற்கு வாகன ஏற்பாடு, கழிப்பறை உள்ளிட்ட சட்டப் படியான வசதிகள் செய்து தர வேண்டும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதியின்படி வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்த வேண்டும். 2024-25 ஆம் ஆண்டில் வேலை செய்த நாட்களுக்கான ஊதிய பாக்கி களை உடனடியாக வழங்க வேண் டும். இந்த போராட்டத்திற்கு, தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளின் நலனுக் காக குரல் கொடுக்கும் இந்த முக்கிய போராட்டத்தில் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.