tamilnadu

img

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்

மதுரை, ஏப்.17-மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் நான்குமாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரைத் திருவிழாவின் 8 -ஆம் நாளான ஏப்.15-ஆம்தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற் றது. ஏப். 16-ஆம் தேதி திக்விஜயம் நடைபெற்றது. 10- ஆம் நாள் திருவிழாவான புதனன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றறது. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வர் மணக்கோலத்தில் பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப் பட்ட போது, பெண்கள் தாலிக் கயிற்றை மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டதுதிருக்கல்யாணத்தை கோவிலுக்கு வெளியிலும் உள்ள பக்தர்கள் காண வேண்டும் என்பதற்காக எல்இடிதிரைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.