ஜகதீப் தன்கர் தலைமறைவு? அமித் ஷா மழுப்பல்
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஒரு மாத காலமாக அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. வீட்டுக் காவலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறுகை யில், “ஜகதீப் தன்கர் பற்றி தேவையற்ற குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். அவர் அரசியல் சாசன பதவி ஒன்றை வகித்த வர். அவர் தன்னுடைய பதவிக் காலத்தின் போது, அரசியல் சாசனத்தின்படி, சிறந்த முறையில் பணியாற்றியவர். அவரு டைய உடல்நல பாதிப்புகளை முன்னிட்டு பதவியில் இருந்து ராஜினாமா செய்துள் ளார். இந்த விசயத்தில் வேறு ஏதேனும் உண்டா? என நீண்ட ஆராய்ச்சி செய்ய யாரும் முயற்சிக்க வேண்டாம்” என்று மழுப்பலாக கூறினார்.