செலக்சன் பள்ளியில் உணவு திருவிழா
அறந்தாங்கி, அக். 12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளின் உணவுப் படைப்புகள் பல்வேறு விதமான உணவு வகைகளின் உணவுத் திருவிழா மற்றும் மாறு வேடப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளியின் மாணவச் செல்வங்கள் அடுப்பில்லா உணவு வகைகள், பண்டைய கால உணவு வகைகள், விழாக் கால உணவு வகைகள் என மிகச் சிறப்பாக செய்தது பெற்றோர்கள், விருந்தினர்களை கவரும் வகையில் இருந்தது. சிறப்பு விருந்தினர்களாக அறந்தாங்கி ரோட்டரி கிளப்பின் தலைவர் ரவிசங்கர், அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் பன்னீர்செல்வம், அறந்தாங்கி திஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் தீன் மற்றும் அறந்தை அறம் ரோட்டரி கிளப்பின் தலைவர் ராமச்சந்திரன் அனைத்து ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மகேஷ்வரி நன்றி கூறினார்.