அறிவியல் அடிப்படையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
சென்னை, ஆக.25 - அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனை யுடன் கல்வித் துறையை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய விண்வெளி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்.பி அனுராக் தாக்குர் மாணவர் களிடம் “விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்” என்று கேட்டார். மாணவர்கள் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர். இதற்கு அனுராக் தாக்குர் “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” என்று கூறினார். இதுகுறித்து நெல்லையில் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளிக்கையில், “அவ்வாறு பேசுவது அவரது இஷ்டம் என்றும், அது குறித்து கருத்து கூற முன்வரவில்லை” என்றும் தெரி வித்தார். “நாங்கள் அறிவியல் சார்ந்து முற் போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக் கல்வித் துறையை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலோடு செயல்படுத்தி வருகிறோம். அறிவைச் சார்ந்த எங்கள் பாதையில், நாங்கள் செல்லும் போது எங்களோடு பயணிக்க விரும்புபவர் கள் வரலாம்” என்று அமைச்சர் கூறினார்.சென்னை, ஆக.25 - அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனை யுடன் கல்வித் துறையை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய விண்வெளி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்.பி அனுராக் தாக்குர் மாணவர் களிடம் “விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்” என்று கேட்டார். மாணவர்கள் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர். இதற்கு அனுராக் தாக்குர் “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” என்று கூறினார். இதுகுறித்து நெல்லையில் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளிக்கையில், “அவ்வாறு பேசுவது அவரது இஷ்டம் என்றும், அது குறித்து கருத்து கூற முன்வரவில்லை” என்றும் தெரி வித்தார். “நாங்கள் அறிவியல் சார்ந்து முற் போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக் கல்வித் துறையை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலோடு செயல்படுத்தி வருகிறோம். அறிவைச் சார்ந்த எங்கள் பாதையில், நாங்கள் செல்லும் போது எங்களோடு பயணிக்க விரும்புபவர் கள் வரலாம்” என்று அமைச்சர் கூறினார்.சென்னை, ஆக.25 - அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனை யுடன் கல்வித் துறையை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய விண்வெளி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்.பி அனுராக் தாக்குர் மாணவர் களிடம் “விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்” என்று கேட்டார். மாணவர்கள் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர். இதற்கு அனுராக் தாக்குர் “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” என்று கூறினார். இதுகுறித்து நெல்லையில் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளிக்கையில், “அவ்வாறு பேசுவது அவரது இஷ்டம் என்றும், அது குறித்து கருத்து கூற முன்வரவில்லை” என்றும் தெரி வித்தார். “நாங்கள் அறிவியல் சார்ந்து முற் போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக் கல்வித் துறையை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலோடு செயல்படுத்தி வருகிறோம். அறிவைச் சார்ந்த எங்கள் பாதையில், நாங்கள் செல்லும் போது எங்களோடு பயணிக்க விரும்புபவர் கள் வரலாம்” என்று அமைச்சர் கூறினார்.