தூய்மைப் பணியாளர்கள் மீதான காவல்துறை தாக்குதல் சிபிஎம் கடும் கண்டனம்
முதல்வர் தலையிட கோரிக்கை
சென்னை, ஆக. 14 - தூய்மைப் பணியாளர் களை கடுமையாகத் தாக்கி, இரவோடு இரவாக போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்தியதும், போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்கள்- ஆதரவு தெரிவிக்கச் சென்றவர்கள் மீதும் கூட காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப் பட்ட அனைவரையும் விடு தலை செய்வதுடன், தாக்கு தல் நடத்திய காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நியாயத்திற்குப் புறம்பானது; மனித உரிமையை மீறியது! இதுதொடர்பாக, கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது: பணி நிரந்தரம் வேண்டும், தனியார்மயம் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்திப் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக காவல் துறை நடத்திய இந்த ‘அப்பு றப்படுத்துதல்’ முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற் கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும். எளிய மக்களுக்கு சாதகமாக அரசு அணுகுமுறை வேண்டும்! ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கை களுக்காக தொழிலாளர்கள் போராடுகிற போது, காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகு முறையும், அரசின் அணுகு முறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண் டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்பு களும் மூர்க்கத்தனமாகவே இதை கையாண்டுள்ளன. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை, காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதைக் கேள்வி கேட்கச் சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாக னத்தில் ஏற்றி சுற்றிக் கொண்டே அலைவதும், நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நடவடிக்கைகள். தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! தமிழ்நாடு அரசு, உடனடி யாக போராடும் தொழிலா ளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப் பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களையும், ஆத ரவு தெரிவிக்க வந்தவர் களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், தாக்குவதற்கு உத்தர விட்டவர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் அவர்கள், உடனடியான மற்றும் நேரடி தலையீட்டின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு நியாய மான தீர்வு காண வேண்டும், அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.