சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
2024இல் வாக்காளருக்கு முகவரியிடப்பட்ட அஞ்சல் அட்டை கூட வசிப்பிடத்திற்கான போதுமான சான்றாக இருந்தது. ஆனால் இப்போது ஆதார் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் பாஜக போலி வாக்காளர்களைச் சேர்க்க விரும்பியது, இப்போது அவர்கள் உண்மையான வாக்காளர்களை நீக்க விரும்புகிறார்கள். குறிக்கோள் ஒன்று மட்டும் தான். அது தேர்தல்களைத் திருடுவது. மோடி பிரதமர் பதவிக்கு எந்த சட்டப்பூர்வமான தன்மையும் இல்லை.
திமுக எம்.பி., ஆ.ராசா
நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி மதிப்பது கிடையாது. இதற்கு முன்பு இருந்த பிரதமர்கள் யாரும் கேள்வி நேரத்தின் போது அவைக்கு வராமல் இருந்தது இல்லை. ஆனால் 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பிரதமர் மோடியை யாரும் பார்த்ததே இல்லை. நாடாளுமன்றத்தில் சர்வாதிகாரம் கொடி கட்டி பறக்கிறது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
குஜராத்தைத் சேர்ந்த பிகு பாய் என்பவர் பீகார் பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர். மோடி, அமித் ஷாவுக்கு நெருக்கமானவர். 2024 மக்களவை தேர்தலில் குஜராத்தில் வாக்கு செலுத்தியவர், இப்போது பீகார் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். முகவரியோ வீட்டு எண்ணோ இடம்பெறவில்லை. இது எப்படி?
மூத்த எழுத்தாளர் சஞ்சய் ஜா
ஒரு காலத்தில் இந்தியாவில் வாக்காளர்கள் அரசாங்கத்தை தேர்வு செய்தனர். ஆனால் இப்போது அரசாங்கம் வாக்காளர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.