மதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கட்டனூரைச் சேர்ந்த 23 வயது, 21 வயது நிரம்பிய இருவர் ஈரோட்டில் பணியாற்றியுள்ளனர், கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர் திரும்பி விட்டனர். இந்தநிலையில் இருவரில் ஒருவருக்கு தொண்டைவலி, வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. மற்றொருவருக்கு காய்ச்சல் மட்டும்இருந்துள்ளது. இருவரையும் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசுஇராஜாஜி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.