tamilnadu

img

மதுரையில் தொடரும் ரேஷன் முறைகேடு 70 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 3- மத்திய - மாநில அரசுகள் அறி வித்துள்ள அடிப்படையில் மது ரையில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பச்சரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் முழுமையாக வாழங்கு வதில்லை.  வழங்கப்படும் பொருட் கள் தரமற்று உள்ளது. எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொட ர்ந்து எழுத்துவருகின்றன. இந்த நிலையில் ரேஷன் கடை களில் பொருட்கள் வழங்குவதில் ஏற்படும் குறைபாடுகள்,  குளறு படிகளை களைய அரசு நட வடிக்கை எடுக்க  வலியுறுத்தி மது ரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  எழுபது இடங்களில் புதனன்று கண்டன இயக்கம் நடைபெற்றது. கட்சியின் மாந கர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் பி. ராதா, மா.கணேசன், இரா. தெய்வராஜ், அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், எம்.பாலசுப்பிரமணியம், ஆர்.சசிகலா, இரா. லெனின், வை.ஸ்டாலின். பகுதிக்குழு செயலாளர்கள் பி. ஜீவா, கு.கணேசன், கா.இளங் கோவன்,  ஏ.பாலு, ஜெ.லெனின், ஏ.எஸ்.செந்தில்குமார், டி.குமர வேல், யு.எஸ். அபுதாகீர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.