சாதிவாரிக் கணக்கெடுப்பு கர்நாடகத்தில் துவங்கியது
பெங்களூரு, செப். 22 - காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநி லத்தில், சமூக மற்றும் கல்வி அடிப்படை யிலான மக்கள்தொகை (Social and Educational Survey - caste census) கணக்கெடுப்பு திங்களன்று (செப். 22) துவங்கியது. இந்த கணக்கெடுப்பு மூலம் மாநிலம் முழுவதும் 2 கோடி குடும்பங்களில் சுமார் 7 கோடி பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. கணக்கெடுப்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்கான பணியில் சுமார் 1.75 லட்சம் அரசு ஊழி யர்கள் - ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்பு அக்டோபர் 7 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மக்கள் தங்களிடம் உள்ள ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு மற்றும் பள்ளி மதிப்பெண் சான்றிதழைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.