அகில இந்திய மாநாட்டு சிறப்பு கருத்தரங்குகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன், மத்தியக்குழு உறுப்பினர் ஆர். கருமலையான், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு சிறப்புக் கருத்தரங்கத்தில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, ஒன்றியச் செயலாளர்
டி. வெங்கட்ராமன் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.