28 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டது
சென்னை, மார்ச் 25 - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக் கான 28 பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்ச் 25 அன்று அதிமுக வெளியிட்டுள்ளது. இதன்படி கட்சியின் பொதுச்செய லாளர் கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியி லும், துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி வேப்பனள்ளி தொகுதியிலும், பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் வேட்பா ளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதி யில் தோல்வியடைந்த சி.வி. சண்முகம் இம்முறை மயிலம் தொகுதியிலும், ராஜ பாளையத்தில் தோல்வியடைந்த ராஜேந் திர பாலாஜி சிவகாசி தொகுதியிலும் போட்டி யிடுகின்றனர். தொகுதி மாறிய முன்னாள் அமைச்சர்கள் போளூர் தொகுதியில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் தொகு திக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த முறை ராயபுரத்தில் தோல்வியடைந்த டி. ஜெயக் குமார் இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தப் பட்டியலில் 20 முன்னாள் அமைச்சர்களும், தற்போது பதவியில் உள்ள 16 அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். பாஜக போட்டியிடும் தொகுதிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக 169, பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, தமமுகவுக்கு 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 என தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதில், பாஜக: மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங் கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), இராமநாதபுரம், குளச்சல், பத்மநாதபுரம், ராசிபுரம் தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அன்புமணி தலைமையிலான பாமக, சேலம் மேற்கு, தருமபுரி, பென்னா கரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலா டுதுறை, திருப்போரூர், உத்தரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டு மன்னார்கோயில் (தனி), கீழ்வேளூர் (தனி), சென்னை பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய தொகுதிகளி லும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக: பெரியகுளம், மன்னார்குடி, திரு வையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நான்குநேரி, ஒட்டப்பிடாரம் (தனி), திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தமாகா: ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்ப கோணம் தொகுதிகளிலும் பாரிவேந்த ரின் ஐஜேகே பல்லாவரம், குன்னம் தொகுதிகளிலும், தமமுக (ஜான்பாண்டி யன் கட்சி) ராஜபாளையம் தொகுதியிலும் ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கே.வி. குப்பம் தொகுதியிலும் போட்டியிடுகின்றன. தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள்; எடப்பாடி அதிர்ச்சி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்திருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 இடங்களி லும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவ தாக அறிவித்துள்ளது. இதேபோல ஐஜேகே, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகளும் தாமரைச் சின்னத்தில் போட்டி யிடுவதாக அறிவித்துள்ளன. ஜான் பாண் டியன் இன்னும் அறிவிக்கவில்லை.